Categories
மாநில செய்திகள்

மெரினாவில் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு விதி எண் 110ன் கீழ் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்..

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது, என் பாதை சுயமரியாதை, தமிழ் நெறி காக்கும் பாதை.. 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கலைஞர்.. தோல்வி அவரை தொட்டதே இல்லை, வெற்றி அவரை விட்டதே இல்லை. இன்று நாம் பாக்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது. 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர்.

மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே விதி எண் 110ன் கீழ் கலைஞருக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்படும். கலைஞரின் அரும்பணிகளை போற்றும் விதமாக அவரின் வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை இந்த தலைமுறையினரும் அறியும் வகையில் விளக்க படங்களுடன் நினைவிடங்கள் இருக்கும்.. நான் முதலமைச்சராக கோட்டையில் இருந்தாலும் குடிசைகளை பற்றியே சிந்திப்பேன் என முதன்முறை ஆட்சிக்கு வந்த போது கலைஞர் கூறினார் என்று தெரிவித்துள்ளார்..

Categories

Tech |