Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினாவில் படுத்துக்கிடந்த தொழிலாளிக்கு நடந்த கொடூரம்.. தப்பியோடிய இருவர்… காவல்துறையினர் வலைவீச்சு…!!

சென்னை மெரினாவில் துப்புறவு பணியாளரை கொடூரமாக கொலை செய்த இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை மாவட்டம், திருவில்லிக்கேணி  வெங்கடாச்சலம் தெருவில் வசித்து வந்தவர் பச்சை என்ற பச்சையப்பன் (50). இவர் மனைவி இறந்துவிட்டார். இவருக்கு பாலாஜி என்ற மகன் உள்ளார். பச்சையப்பன் துப்புரவுத் தொழில் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்லாமல் மெரினா நடைபாதையில் பச்சையப்பன் படுத்து கிடந்துள்ளார்.

அப்போது அங்கு 2 மர்ம நபர்கள் வந்து  பச்சையப்பனை  தாக்கி தரையில் தரதரவென்று இழுத்துச் சென்றார்கள். அதன்பின் கொலைவெறியுடன் பச்சையப்பனின் தலையை தரையில் முட்ட செய்து கொடூரமாக காலால் மிதித்து வன்மையாக தாக்கியுள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் பச்சையப்பன் கத்தி சத்தம் போட்டார். இந்த சத்தத்தை கேட்டு அங்கிருந்த ஒரு பெண் ஓடி வந்துள்ளார். உடனே அவரை பார்த்ததும் அந்த மர்ம நபர்கள் தப்பித்து சென்று விட்டனர்.

இதனையடுத்து உடனே படுகாயமடைந்த பச்சையப்பனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், மெரினா போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் கொலை வழக்கு பதிந்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களை பிடித்தால்தான் பச்சையப்பன் எதற்காக கொலை செய்யபட்டார்? என்ற விவரம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தார்கள்.

Categories

Tech |