Categories
மாநில செய்திகள்

மெரினாவில் பேனா நினைவுச் சின்னம்….. மத்திய வல்லுநர் குழு அனுமதி?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தை பிரம்மாண்ட சிலையாக சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. இது மாநிலம் முழுவதும் பேசு பொருளாகி பல்வேறு தரப்பினர் இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மத்திய வல்லுநர்குழு சென்னை மெரினாவில் பேனா வடிவு சின்ன அமைக்க ஆய்வு நடத்தியுள்ளது. சென்னை மெரினாவில் 137 அடி உயரத்தில் பேனா நினைவுச்சின்ன அமைப்பது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக வல்லுநர் குழு ஆய்வு செய்து, இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகளை செய்யப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த பேனா வடிவிலான நினைவிடம் ரூ.39 கோடியில் அமைக்கும் திட்டத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஒப்புதல் கோரப்பட்டது. மாவட்ட அளவினால் இந்த ஆணையம் இதற்கு சில நிபந்தனைகள் விதித்து மாநில ஆணையத்துக்கு அனுப்பியது. மாநில ஆணையத்தின் ஜனவரியில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து முதல்வர் கருணாநிதி நினைவிட அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 650 மீட்டர் தொலைவில் 137 அடி உயரத்துக்கு கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு மாநில கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் பொதுப்பணித்துறை விண்ணப்பித்தது. கடலில் கட்டுமானங்கள் மேற்கொள்ள மாநில அளவில் அனுமதி வழங்க முடியாது. எனவே இந்த விண்ணப்பத்தை சில நிபந்தனைகள் அடிப்படையில் மத்திய கடலோர ஒழுங்குமுறை மண்டல வேளாண்மை ஆணையத்துக்கு அனுப்ப மாநில ஆணையம் பரிந்துரைத்தது. இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பிட ஆய்வு சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் சூழலியல் அபாயம் மதிப்பீடு ஆய்வு, பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் அவசரகால செயல் திட்டம் தயாரித்து, தமிழக மாசு கட்டுப்பாடு வாரிய மூலம் பொதுமக்களிடம் கருத்துக்கேற்ப கூட்டத்தை நடத்திய பின் மத்திய அரசிடம் விண்ணப்பிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் மேலாண்மை ஆணைய வல்லுநர்கள் அடங்கிய மதிப்பீடு குழு கூட்டம் இணையதளம் மூலம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க அனுமதி கோரும் விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டது. இந்த குழுவின் ஆய்வின் பெயரில் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கலாமா? வேண்டாமா? என்று முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |