தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், கடற்கரை பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதனால் கடல் வளங்கள் பாதிக்கப்படும் எனவும், ஆமைகள் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் எனவும் கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. அண்ணா நினைவிடத்தில் உள்ள வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ.2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி செலவில் தமிழக அரசால் இங்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது.
நினைவிடத்தில் திறந்த வெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் வளைவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் முழு வீச்சில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நினைவுச் சின்னம் மொத்தம் 8,551.13 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.81 கோடி செலவில் நிறுவப்படுகிறது. அதில் 2263.8 சதுர மீட்டர் பரப்பளவில் பேனாவிற்கான நிலை மேடையும், 2, 073.01 பரப்பளவில் நினைவுச் சின்னத்திற்கு செல்வதற்காக கடலுக்கு மேல் அமைக்கப்படும் நடைபாதையும், 1856 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடல் நிலத்தின் மேல் அமைக்கப்படும் வலைப்பாலமும், 1,610.60 சதுர மீட்டர் பரப்பளவில் கடற்கரையில் அமைக்கப்படும் நடைபாதையும், 748.44 சதுர மீட்டர் பரப்பளவில் நினைவு சின்னத்திலிருந்து பாலத்திற்கு செல்லும் நடைபாதையும் அமைக்கப்பட வேண்டும்.
இதுபோல கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்திற்கு மேல் நினைவுச்சின்னம் அமைய வேண்டும். இதனையடுத்து கடற்கரையிலிருந்து 360 மீட்டர் தொலைவில் அமைய உள்ள பேனா சின்னத்தில் 42 மீட்டர் அதை சுற்றி தோட்டங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் நினைவுச் சின்னத்தை நோக்கி அமைக்கப்பட இருக்கின்ற பாலம் தரை பாலம், தரைப் பகுதியில் இருந்து 290 மீட்டர் நீளத்திலும், கடலுக்கு மேல் 6 மீட்டர் உயரத்தில் 360 மீட்டர் நீளத்திலும் அமைக்கப்படுகிறது. மொத்தமாக 650 மீட்டர் நீளம் கொண்ட அந்த பாலத்தின் அகலம் 7 மீட்டராகும். அதில் 3 மீட்டர் கண்ணாடியாலான தளம் அமைக்கப்படுகிறது.