சென்னை மெரினா கடற்கரையில் கடந்த வாரம் புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை இன்று முதல் பயன்பாட்டிற்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக 1.14 கோடி செலவில் மரத்தினால் செய்யப்பட்ட சிறப்பு பாதை கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் புயல் காரணமாக சிறப்பு பாதை பெரிதும் சேதம் அடைந்தது.
அதனால் உடனடியாக சிறப்பு பாதை சீரமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறப்பு பணிக்காக இந்த பாதையில் யாரும் பயணிக்க முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டு சீரமைப்பு பணி நடைபெற்றது. இந்நிலையில் சீரமைப்பு பணி முழுமையாக முடிவடைந்துள்ளதால் இன்று முதல் இந்த பாதை பயன்பாட்டிற்கு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.