Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினாவில் 900 ஸ்மார்ட் கடைகள்… போடு செம நியூஸ்…!!!

சென்னை மெரினாவில் 90 ஸ்மார்ட் கடை ஒதுக்கீடு செய்ய குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. பல்வேறு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு மெரினா கடற்கரை திறப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்காமல் காலதாமதம் செய்து வந்தது. அதன்பிறகு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் தமிழக அரசு கடந்த டிசம்பர் 14ஆம் தேதி மெரினா கடற்கரை செல்ல அனுமதி அளித்தது.

அதனால் தற்போது மெரினா கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மெரினாவில் 900 ஸ்மார்ட் கடை ஒதுக்கீடு செய்ய ஜனவரி 20 மற்றும் 21 தேதிகளில் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |