Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மெரினா கடற்கரையில் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறிப்பு”…. சிறுவன் உள்பட 2 பேர் கைது….!!!!!

மெரினா கடற்கரையில் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்த நிலையில் ஒரு சிறுவனை தேடி வருகின்றார்கள்.

சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அகில் வர்கிஸ் பால் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக இருக்கின்றார். இந்த நிலையில் இவர் நேற்று இரவு 10:30 மணி அளவில் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். காற்று வாங்கியபடி அவர் மணற்பரப்பில் நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மூன்று நபர்கள் வர்கீஸ் பாலை மிரட்டி பணம் கேட்டுள்ளார்கள்.

இவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் பீர் பாட்டிலால் தாக்கி விட்டு செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து விட்டார்கள். இதில் காயமடைந்த அகில் வர்கீஸ் பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் வழிப்பறியில் ஈடுபட்டது சபரி என்ற இளைஞரும் 14 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதில் சபரி மற்றும் 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்த நிலையில் மேலும் ஒரு சிறுவனை தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |