மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை போன்ற வடிவில் பிரமாண்ட நினைவிடம் கட்டப்பட்டது. ஜனவரி 27ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார்.
முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டும் பணி 2018 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. 80 கோடி ரூபாய் மதிப்பில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அதன் அருகே 12 கோடி செலவில் அம்மா அரங்கம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை அம்மாவின் பிறந்தநாள் தினத்தன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார் . அம்மா அருங்காட்சியகத்தில் உள்ளே ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் புகைப்படம் மற்றும் சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடம் வரக்கூடிய மக்கள் ஜெயலலிதாவிடம் நேரடியாகப் பேசும் வகையில் தொழில் நுட்பம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்மா அருங்காட்சியகத்துக்கு உள்ளே தனி அறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பொத்தானை அழுத்தினால் நீங்கள் கேட்கும் கேள்விக்கு ஜெயலலிதா உங்களுடன் நேரடியாகப் பேசுவது போல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதா நினைவிடம் பார்க்க விரும்பும் மக்கள் அவர்களுடன் பேசவும் முடியும் என்று கூறியுள்ளனர்.