மெழுகுவர்த்தியிலிருந்து உடையில் தீப்பற்றி எரிந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பாக்யராஜ், சபரிநாதன் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் ராஜேஸ்வரி தனது வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜேஸ்வரியின் உடை மெழுகுவர்த்தி மீது பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. சிறிது நேரத்திற்குள் உடை முழுவதும் தீப்பற்றி ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.