Categories
பல்சுவை

“மெழுகுவர்த்தி” விண்வெளியில் எப்படி எரியும் தெரியுமா?…. வாங்க பார்க்கலாம்….!!!

மெழுகுவர்த்தியானது பூமியில் எரிவதை விட விண்வெளியில் வித்தியாசமாக எரியும் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாம் பூமியில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கும் போது சுடரானது மேல்நோக்கி எரிகிறது. ஆனால் இதே மெழுகுவர்த்தியை விண்வெளியில் ஏற்றி வைத்தால் எப்படி எரியும் என்று யோசித்து பார்த்து இருக்கிறீர்களா? இந்த சோதனையை நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகம் செய்திருக்கிறது. அதாவது பூமியில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கும் போது அதிலிருந்து வரும் ஹாட் கேஸ் மேல் நோக்கியும், கூல் கேஸ் கீழ்நோக்கியும் செல்கிறது. இதன் காரணமாகத்தான் மெழுகுவர்த்தி ஒரு கூம்பு வடிவம் போல் எரிகிறது. இதற்கு காரணம் கிராவிட்டி ஆகும்.

ஆனால் இந்த கிராவிட்டி பூமியில் மட்டும் தான் இருக்கிறது. இந்நிலையில் மெழுகுவர்த்தியை நாம் விண்வெளியில் ஏற்றி வைக்கும் போது அங்கு கிராவிட்டி இல்லாத காரணத்தினால் மெழுகு வர்த்தி  கூம்பு வடிவில் எரியாமல், வட்ட வடிவத்தில் எரியும். மேலும் டாக்டர் ஷானல் லூசிட் என்பவர் ஒரு மெழுகுவர்த்தி ஆனது பூமியில் 10 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவாக எரியும் என்றும், விண்வெளியில் ஒரு மெழுகுவர்த்தியானது 45 நிமிடங்கள் வரை எரியும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |