Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை திட்டத்திற்கு…. மத்திய அரசு அனுமதி தரும்…. கர்நாடக முதல்வர் நம்பிக்கை…!!!

தமிழ்நாடு மற்றும் கர்நாடக இடையே பலகாலமாக காவிரி நதி நீர் பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே அணை கட்ட கூடாது என்று தமிழக அரசு பிடிவாதமாக இருக்கிறது. ஆனால் கர்நாடக அரசு அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வருகிறது. இந்நிலையில் மேகதாது அணை திட்டம் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை பெறுவதற்காக கர்நாடக முதல்-மந்திரி முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை டெல்லி சென்றுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் காவிரி- வைகை- குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு கர்நாடக மாநிலத்தின் எதிர்ப்பை மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் பதிவு செய்துள்ளோம். மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி தரும் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |