மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
தமிழகம் கர்நாடகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகின்றது. கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. இருப்பினும் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் ,மேகதாது அணை திட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பெங்களூர் நகருக்கு 23.5 டிஎம்சி தண்ணீரை சேமித்து வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அணை கட்டுவது மிகவும் முக்கியமாகும். இதுகுறித்து தமிழக முதல்வருக்கு விரிவாக கடிதம் எழுதி இருக்கிறேன். ஆனால் தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. அணை கட்டும் பணிகள் விரைவில் சட்டரீதியாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.