மேகதாது அணை விவகாரத்தை காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடைவிதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிதாக மனுத்தாக்கல் செய்துள்ளது. நடைபெற இருக்கும் காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய தடைவிதிக்க வேண்டும்.
அத்துடன் நீதிமன்றத்தில் விவகாரம் நிலுவையில் இருக்கும்போது, அதை ஆணையக்கூட்டத்தில் விசாரிப்பது என்பது உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு எதிரானது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிப்பதற்கு உரிய அதிகாரம் படைத்த ஆணையம் காவிரிநீர் மேலாண்மை ஆணையம் அல்ல எனவும் இந்த ஆணையம் அமைக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கமே உச்சநீதிமன்ற உத்தரவின்படி இருமாநிலங்களுக்கும் இடையே முறையாக நீர் பங்கீடு செய்வதற்கு மட்டுமே எனவும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.