கர்நாடகம், தமிழகம் இடையே நீண்ட காலமாக காவிரி நீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வுகாண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடக அரசு, ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் மேகதாது அணை திட்டம், நதி நீ்ர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை பெறவும், மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நாளை சந்தித்து பேச உள்ளார். இதற்காக பசவராஜ் பொம்மை இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.