மேகதாது அணை தொடர்பாக நான்கு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ் நாட்டின் எல்லையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதால் மற்ற மாநிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவும். இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் மற்ற மூன்று மாநிலங்களும் மாற்று கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் சுமூக முடிவு காணும் வகையில் கர்நாடகா, கேரளா, ஆந்திரம், தமிழகம் ஆகிய நான்கு மாநில முதல்-மந்திரிகள் உடனும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் திட்டமிட்டுள்ளார். நான்கு மாநிலங்களில் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் மேகதாது விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.