பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த ஹரியும் – மேகன் மார்கல் இருவரும் சேர்ந்து அளித்த பேட்டி உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன்அரசகுடும்பத்தை சேர்ந்த தம்பதிகள் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல். இவர்கள் இருவரும் சேர்ந்து ஓப்ரா தலைமையின் கீழ் அமெரிக்காவின் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான இந்த பேட்டி உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் அந்த பேட்டியில் பிரித்தானிய அரச குடும்பத்துக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
இதனையடுத்து இவர்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மேகன் தந்தை உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நேர்காணல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போது இளவரசி மேகன் மார்கல் “நிகழ்ச்சி எப்படி போகிறது” என்ற குறுஞ்செய்தி ஒன்றை ஓப்ராவிற்கு அனுப்பியுள்ளார். அந்த செய்தியை ஓப்ரா தற்போது வெளியிட்டிருப்பதாகவும், அதுமட்டுமின்றி அவரை சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.