மேகன் செய்வது எல்லாமே நடிப்பு அவர் ராணியாரின் இறுதி சடங்கில் முதலை கண்ணீர் தான் வடித்தார் என்பது போன்ற கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஒரு பெரும் கூட்டம் பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதே சமயம் மேகனுக்கு எதிராக இனவெறி மற்றும் நிறவெறியை தொடர இந்த மாதிரியான பதிவுகள் வெளியிடப்படுவதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டியிருக்கின்றனர். மறைந்த ராணியாரின் இறுதி சடங்கின் போது மேகன் கண்ணீர் விட்ட புகைப்படங்கள் வைரலாக பரவி வந்தது. இறுதி சடங்கு நடைபெற்று மூன்று நாட்கள் ஆகின்ற நிலையில் மேகன் வராத அழுகையை வேண்டுமென்றே வரவழைத்து முதலை கண்ணீர் விட்டார் எனவும் அதை நம்ப மாட்டோம் எனவும் ஒரு தரப்படும் தற்போது வரை அவரை வசைப்பாடி வருகின்றார்கள்.
மேலும் twitter இல் Meghanmarkleexposed எனப்படும் மேகனின் முகம் அம்பலமானது என்பதை குறிக்கும் ஹேஷ்டாக் பெரிய அளவில் டிரான்ட் ஆகி வருகின்றது. அதில் அவர் டயானாவை போல தன்னை நினைத்து அவரை பின்பற்றுகின்றார் ஆனால் அவர் போலியானவர். மேலும் அது எப்படி மேகன் கண்ணீர் விடும்போது இடது கண்ணில் மட்டும் கண்ணீர் வடிகிறது. அவர் ஒரு நடிகையாக இருந்தவர் தான் நினைத்தால் உடனே அழ முடியும் என முன்னர் வீடியோவில் கூறியிருந்தார். ராணி இறுதி சடங்கில் அழுத ஒரே அரச குடும்ப நபர் அவர்தான் மேகம் மன்னர் சார்லசை தனியாக சந்தித்து பேச வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றார். இதனை அடுத்து அவர் சமாதானத்திற்கு முயற்சி செய்கிறார் எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர் அவர் பிரித்தானியாவை விட்டு வெளியேற வேண்டும் போன்ற காட்டமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அதே சமயம் மேகனுக்கு ஆதரவான பதிவுகள் வருவதையும் காண முடிகின்றது.