மேகன் அரச குடும்பத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டு உண்மையில்லை என அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப். இவர் அங்குள்ள தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தபோது மேகன் மெர்க்கல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த டிரம்ப் நான் மேகனின் ஆதரவாளன் அல்ல, இருந்தாலும் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை நான் வரவேற்கிறேன், ஏனென்றால் அப்போதுதான் நான் இன்னும் உத்வேகத்துடன் தேர்தலில் போட்டியிட முடியும் என்று பதிலளித்துள்ளார்.
இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம் மேகன் வெறுப்பு அரசியலுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதற்கு பதிலளித்த ட்ரம்ப், மேகன் ஒன்றும் நல்லவர் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் பிரிட்டன் அரச குடும்பத்தின் மீதும், மகாராணியார் மீதும் மேகன் மெர்க்கல் முன் வைத்த குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை என்று டெனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்