Categories
தேசிய செய்திகள்

மேகவெடிப்பு எதிரொலி…. அமர்நாத் யாத்திரை நிறுத்தம்…. காணாமல் போன 40 பேர்…. வெளியான தகவல்…..!!!!

அமர்நாத் யாத்திரை என்பது இமய மலையின் மேல் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு வருடந்தோறும் நடைபெறும் யாத்திரையாகும். அமர்நாத் பனிக் குகை நோக்கி 43 நாட்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். அந்த அடிப்படையில் இந்த வருடத்துக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 30 துவங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி முடிவடைகிறது. இந்த யாத்திரைக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பதிவுசெய்துள்ளனர். கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக யாத்திரை நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு யாத்திரை சென்ற ஜூன் 30 துவங்கி நடந்து வருகிறது. இதனிடையில் இங்கு குறிப்பிட்ட இடத்தில் குறுகிய நேரத்தில் மிக கன மழை கொட்டுவது, மேகவெடிப்பு நிகழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமர்நாத் புனித யாத்திரை நடந்துவரும்போது பக்தர்கள் போகும் குகை அருகேயுள்ள பகுதியில் திடீரென்று மேகவெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்வேறு முகாம்கள் அடித்துச் செல்லப்பட்டது.

மேலும் மேகவெடிப்பு காரணமாக பலியானோர் எண்ணிக்கையானது 15ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி 40 பேர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்புபடையினர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இந்த யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படையின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையில் காயமடைந்தவர்கள் வான் வழியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |