Categories
உலக செய்திகள்

“மேக்ரானின் நிலைப்பாடு மிகவும் தவறானது”…. பத்திரிக்கையாளர்களிடம் கூறிய புதின்…. எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர்….!!!

உக்ரைன் விவகாரமாக ரஷ்ய அதிபர் புதினை பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரான் சந்தித்து பேசியுள்ளார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய நாடு ஒரு லட்சம் படை வீரர்களை உக்ரேனின் எல்லைப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் எந்த நேரமும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க கூடும் என்று அமெரிக்கா எச்சரித்து வருகின்றது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா போர் தளவாடங்களை எல்லையில் நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் எப்பொழுது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம். இதனைத் தொடர்ந்து உக்கரைன்-ரஷ்யா இடையிலான போர் பதற்றத்தை தடுக்கும் வகையில் சர்வதேச நாடுகள் முயற்சித்து வருகின்றன. இம்முயற்சியை பிரான்ஸ் அதிபரான மேக்ரான் மேற்கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரான் ரஷ்யாவிற்கு சென்று அந்நாட்டின் அதிபர் புதினை சந்தித்து பேசியுள்ளார். மேலும் அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசிய முதல் ஐரோப்பிய தலைவர் மேக்ரான் ஆவார் . இந்த சந்திப்பு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. இந்நிலையில் இருநாட்டு அதிபர்களும் சந்தித்து பதற்றத்தை தணிப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்தனர். பிறகு இருவரும் சேர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசினர்.

அப்போது பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரான் கூறியதாவது, “நாம் அனைவரும் ஐரோப்பாவில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலைத்தன்மைக்கான பாதையைக் கண்டுபிடிக்க வேண்டும். இப்போது அதற்கான வாய்ப்பும் நேரமும் உள்ளது. ரஷ்யாவும் ஐரோப்பிய ஒன்றியமும் நிலைமையை உறுதிப்படுத்த குறிப்பிட்ட நடவடிக்கைகளில் உடன்பட வேண்டும். மேலும் ரஷியாவும் ஐரோப்பாவும் பாதுகாப்பு உத்தரவாதங்களில் கூட்டாக செயல்பட வேண்டும். உக்ரைன் எல்லையில் உள்ள ரஷ்ய துருப்புகளின் இருப்பு குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி பதற்றமாக இருக்கிறார். உக்ரைன் மோதலை தணிக்க வரும் நாட்கள் முக்கியமானதாக இருக்கும்”  என மேக்ரான் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

மேலும் மேக்ரானை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அதாவது “உக்ரைன் விவகாரத்தில் மேக்ரானின் கருத்துக்களுடன் தான் உடன்படவில்லை. உக்ரைனில் பிராந்திய ஒருமைப்பாட்டை ரஷ்யா மீறியது என்ற மேக்ரானின் நிலைப்பாடு மிகவும் தவறானது” என்றார். இதனை தொடர்ந்து பேசிய அவர் “2014-இல் உக்ரைனில் நடந்த ஆட்சி கவிழ்ப்பை மேற்கத்திய நாடுகள் ஆதரித்தது ஏன்? ஆரம்பத்தில் கிரிமியாவின் ஆட்சி அதிகாரம் பலத்தால், ஆயுதங்கள் மூலம் ரத்தத்தால் கைப்பற்றப்பட்டது. இந்த நிலைமைகளின் கீழ், கிரிமியாவில் வாழ்ந்த மக்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ரஷ்யாவுக்கு ஏற்பட்டது” என பேசியுள்ளார். மேலும்  உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததற்காக ரஷ்ய நாட்டு அதிபர் மேக்ரானை பாராட்டியுள்ளார்.

இந்த சந்திப்பிற்கு அடுத்த முயற்சியாக ஜெர்மனி அதிபர் ஓலாப் ஷோல்ஸ் அமெரிக்கா சென்று ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்தார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு பெட்ரோலிய பொருட்கள்  கொண்டு செல்லும் “நார்த் ஸ்ட்ரீம் 2” என்னும் எரிவாயு குழாய் துண்டிக்கப்படும் என ஜோ பைடன் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |