டிராக்டர் மோதிய விபத்தில் 13 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொம்பக்குளம் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து 850-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் 2 பேரும் சேர்ந்து திட்டகுளம் பகுதியில் ஆட்டு கிடை போடுவதற்காக ஆடுகளை அழைத்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் திடீரென ஆடுகள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 13 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதுகுறித்து செல்வம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.