Categories
மாநில செய்திகள்

“மேஜிக் செய்தால் கடும் நடவடிக்கை”… தமிழக அரசு எச்சரிக்கை…!!!

கனிம வளத்தை பொருத்தவரை கல் குவாரியோ  , மணல் குவாரியோ  எதுவாக இருந்தாலும் பணம் கொட்டுவதால்  அங்கு விதிமீறல்கள் தாராளமாக நடக்கிறது. அதிலும் கிரானைட் குவாரிகள் என்றால் கோலார் சுரங்கத்தில் தங்கத்தை வெட்டி எடுப்பது போல என்பதால் என்னென்ன வகையில் அரசு வருவாயை ஆக்கிரமிக்க முடியுமா அந்த வகையில் எல்லாம் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

குவாரிகளை பொறுத்தவரை கனிம வளத்துறையின்  உரிமம் பெறவேண்டும். இந்நிலையில் குவாரிகளில்ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க அழியும் தன்மையில் உள்ள மேஜிக் பேனாவை பயன்படுத்தி முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமவளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்குவாரி மற்றும் மண்குவாரிகளில் வழங்கப்படும் டிரிப் சீட்டுகளில்  அழியக்கூடிய பேனா மூலம்(சில மணி நேரத்திற்கு பின் மை அழிந்துவிடும்)  மோசடி செய்கின்றனர். ஒரு லோடுக்கு பதிலாக பல லோடு டிரிப் அடிக்கின்றனர்.  இதனை தடுக்கும் விதமாக இந்த எச்சரிக்கை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |