மேஜையில் வைத்த 18 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குப்பையாதேவர் பகுதியில் பழனிசெல்வம்-ராஜலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமிக்கு கழுத்து வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜலட்சுமி தன் கழுத்தில் இருந்த 18 பவுன் தங்க நகையை அருகிலிருந்த மேஜையில் வைத்துவிட்டு தூங்கியுள்ளார்.
இதனையடுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்த போது மேஜையில் இருந்த நகை காணாமல் போனதை கண்டு ராஜாலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பழனி செல்வம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.