அமெரிக்காவில் கொள்ளையடிக்க முயற்சி செய்த திருடனை சிறையில் அடைக்க உத்தரவு செய்த நீதிபதி .
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த இளைஞர் தன் கைவரிசையைக் காட்ட ஆளில்லாத வீட்டில் நுழைந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருடனை கைது செய்தது.
மேலும் காணொளி வாயிலாக நீதிபதி விசாரணை நடந்தது. விசாரணை மேற்கொண்ட பெண் நீதிபதியை ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்’ என்று கூறி மயக்க முயற்சி செய்த திருடனின் செயல் இணையதளத்தில் வீடியோவாக வைரலாகி பரவி வருகிறது. திருடனின் பேச்சுக்கு மயங்காத நீதிபதி அவனை சிறையிலடைக்க உத்தரவிட்டார்.