Categories
தேசிய செய்திகள்

மேடம் நீங்க வெளியே போங்க!…. சசிகலா புஷ்பாவின் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்…. காரணம் என்ன தெரியுமா?….!!!!

சசிகலா புஷ்பாவின் வீட்டில் அதிகாரிகள் காலி செய்துள்ளனர்.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை  தூத்துக்குடியில்  அதிமுக சார்பில் சசிகலா புஷ்பா மேயராக  இருந்து வந்தார். இதனையடுத்து மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் மாநிலங்களவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தன்னை அடித்துவிட்டார் என்று கூறினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது 2-வது திருமணம் தொடர்பான விவாகரத்திலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இந்நிலையில் பாஜகவில் இணைந்த அவர் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார்.

இதனையடுத்து மாநிலங்களவையில் எம்.பி.யாக இருந்த போது அவருக்கு டெல்லியில் மத்திய அரசு சார்பில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. ஆனால் இவரின் பதவிக்காலம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை அவர் காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை காலி செய்யும்படி அரசு தரப்பில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு அவர் கூறிய பதிலளிக்கவில்லை. இந்நிலையில் ரசிகலா புஷ்பா வீட்டிற்கு சென்ற மத்திய அரசு அதிகாரிகள் வீட்டில் இருந்த பொருட்களை வெளியே வைத்துவிட்டு அந்த குடியிருப்பிற்கு சீல் வைத்துள்ளனர்.

Categories

Tech |