மைதானத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த வார்னர் திடீரென்று புட்டபொம்மா பாட்டிற்கு நடனம் ஆடியது வைரலாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கின் போது வார்னர் தனது மனைவியுடன் டிக்டாக்கில் நடனமாடி பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இது அனைத்தும் பயங்கர வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வார்னர் புட்டபொம்மா நடனம் உலகையே கலக்கியது.
இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் ஒரு நாள் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. அந்த ஆட்டத்தின் போது பில்டிங் செய்த வார்னர் திடீரென்று முட்டபொம்மா ஸ்டெப்பை போட ஆரம்பித்துவிட்டார். இதனை பார்த்த அரங்கமே கூச்சலிட்டு கொண்டாடியது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.