மேட்டுப்பாளையத்திலிருந்து உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு இரவு நேர ரயிலை இயக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
கோவை, பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட தென் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்கு செல்வதற்காக பெரும்பாலும் இரவு பயணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். ஆனால் அங்கே இரவு நேர ரயில் இயக்கப்படாததால் பேருந்தில் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனால் அதிக செல்லவும் அலைச்சலும் ஏற்படுகின்றது. காலையில் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக முன்பதிவில்லா ரெயில் இயக்கப்படும் நிலையில் அங்கு எல்லா நேரங்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கின்றது.
ஆகையால் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை வழியாக திருச்செந்தூர் செல்லும் வகையில் இரவுநேர ரயிலை இயக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இதன்மூலம் ஆன்மீக தலங்களுக்கு செல்பவர்களுக்கும் பயனடையும் வகையில் அமையும். தற்பொழுது கோடை விடுமுறை ஆரம்பித்து இருப்பதால் சுற்றுலா செல்வதற்கு பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள். ஆகையால் இந்த ரயிலை இயக்கினால் நன்றாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.