மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும், காங்கிரஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக இரு முறை வென்றுள்ளது. அதிமுக 8 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போதைய எம்எல்ஏ அதிமுகவினர் ஓ.கே. சின்னராஜ் மேட்டுப்பாளையம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,95,802 ஆகும்.
கருவேப்பிலை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையும், கருவேப்பிலையிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. விளைநிலங்களில் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடனுதவி கிடைக்க நடவடிக்கை தேவை என நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர். வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலைகள் உருவாக வேண்டும் என்றும் கூறுகின்றனர்.