Categories
மாநில செய்திகள்

மேட்டுப்பாளையம் டூ நெல்லை ரயில்…. பயணிகள் விடுத்த முக்கிய கோரிக்கை…..!!!!!

மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு புதிதாக சேவையைத் தொடங்கிய ரயிலில் பொதுமக்களும், வர்த்தகர்களும் உற்சாகத்துடன் பயணத்தைத் தொடங்கினர்.

கோடை சீசனை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் -நெல்லை இடையில் வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடங்கி இருக்கிறது. கடந்த வியாழனன்று இரவு நெல்லையில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் நேற்றிரவு மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லை புறப்பட்டது. கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், தென்காசி என்று முக்கியமான நகரங்களை இணைக்கும் இந்த ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 75 % அளவுக்கு பயணிகள் புறப்பட்டனர்.

இந்த ரெயில் சேவைக்கு மேட்டுப்பாளையத்தில் வரவேற்பு தெரிவித்த பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் உற்சாகமாக வழியனுப்பினர். அத்துடன் ஜூன் இறுதிவரை இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள இந்த வாரந்திர ரயிலை, தினசரி சேவையாக்கி நிரந்தரமாக்கிடுமாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Categories

Tech |