Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து…. டெல்டா பாசனத்துக்கு 25,500 கன அடி நீர் திறப்பு…..!!!!

கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்ந்துவருவதால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வரும் நீரின் அளவு  அதிகரித்துள்ளது. கடந்த சில  நாட்களாக   கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்துவருகிறது.

கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தங்கள் முழுக் கொள்ளளவை எட்டியதால், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து ஒன்றரை லட்சம் கன அடி நீரும் கபினி அணையிலிருந்து 70 ஆயிரம் கன அடி நீரும் காவிரியில் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு 23,000 கன அடியிலிருந்து 25 ஆயிரத்து 500 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி, 16 கண் பாலம் வழியாக 2500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியில் நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆக உள்ளது.

Categories

Tech |