தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளநிலையில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதை எடுத்து காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் – 120.07 அடி, நீர் இருப்பு – 93,582 டிஎம்சி, நீர்வரத்து – 2,00,000 கன அடி, நீர் வெளியேற்றம் – 2,10,000 கன அடியாக உள்ளது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2.45 லட்சம் கனஅடி இருந்து 2 லட்சம் கனஅடியாக குறைந்தது.
மேலும் ஒகேனக்கலில் நிலவும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.கொடுமுடி பகுதியில் வெள்ளநீர் வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 200 ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின.