காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர் திறப்பால் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 5.12 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்நிலையில் மேட்டூர் அணையை பிறக்கும் முதல் திமுக முதலமைச்சர் என்ற பெருமையை பெறுகிறார் ஸ்டாலின். அதிமுகவின் முதல் முதலமைச்சராக ஈபிஎஸ் திறந்த நிலையில், திமுகவின் முதல் முதல்வராக ஸ்டாலின் அணையை திறக்கிறார். மேலும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் வருகின்ற 16 அல்லது 17 ஆம் தேதி கல்லணையை சென்றடைய வாய்ப்புள்ளது.