மேட்டூர் அணை 16 கண் மதகுகள் பகுதியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் திறந்துவிடப்பட்ட நிலையில் 16 கண் மதகுகள் பகுதியில் இருக்கும் குட்டைகளில் சிறிய அளவிலான மீன் குஞ்சுகள் இறந்து மிதந்தது. இதில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.
இது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளதாவது, மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்ட பொழுது அந்தத் தண்ணீர் பாறைகளுக்கு இடையே இருக்கும் குட்டைகளில் தேங்கி நிற்கின்றது. இதில் மீன் குஞ்சுகள் செத்து மிதந்து இருக்கிறது. தேங்கி இருந்த தண்ணீரில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் மீன்கள் இறந்திருக்கின்றது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் என கூறியுள்ளனர்.