Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில்…. 210 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி…. வெளியான முக்கிய தகவல்….!!!

அனல் மின் நிலையத்தில் குறைந்த அளவில் மின்சாரம் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதேப்போன்று 210 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய மின் உற்பத்தி நிலையம் ஒன்றும் இருக்கிறது. இந்த பழைய மின் உற்பத்தி நிலையத்தில் 4 யூனிட்டுகள் இருக்கிறது. இங்குள்ள புதிய அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இந்தப் பழுதை சீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் பிறகு பழைய அனல் மின் நிலையத்தில் உள்ள 2-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து 3 மற்றும் 4-வது யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதில் நிர்வாக காரணங்களுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தற்போது 1-வது யூனிட்டில் மட்டுமே மின் உற்பத்தியானது நடைபெறுகிறது. இங்கு 210 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப் செய்யப்படுகிறது.

Categories

Tech |