மேட்டூர் பூங்காவில் நேற்று அதிக அளவு சுற்றுலா பயணிகள் திரண்டதால் அதிக நுழைவு கட்டணம் வசூலானது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பூங்காவிற்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிக அளவு சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வந்தார்கள். ஒரு சிலர் பூங்காவை சுற்றிப் பார்த்த பிறகு அணையின் வலது கரையை பகுதியில் இருக்கும் பவள கோபுரத்திற்கு சென்று அணையின் அழகை ரசித்தார்கள்.
மேட்டூரில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக வருகை புரிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் 20 ஆயிரத்து 650 பேர் மேட்டூர் பூங்காவிற்கு வருகை புரிந்துள்ளார்கள். மேலும் அணையின் பவள விழா கோபுரத்திற்கு 2,694 பேர் வருகை தந்தார்கள். பொதுமக்கள் அதிக வருகையால் நுழைவு கட்டணமாக 1 லட்சத்து 16 ஆயிரத்து 750 ரூபாய் வசூலானது.