மேதகு திரைப்படம் பலருக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இருக்கும் என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களின் நன்கொடையின் மூலமாக பிரபாகரனின் இளமைக்காலம் வாழ்வை சொல்லும் படமாக உருவாக்கப்பட்டது மேதகு திரைப்படம். அந்த காலத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமையும், அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையை எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட படம் இதுவாகும். மேலும் பிரபாகரன் எதனால் ஆயுத வழிப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தார் என்பதும் இந்தப் படத்தில் சொல்லப்படுகின்றது. இந்த படத்தின் கதையை இயக்குனர் தி. கிட்டு எழுதி இயக்கியுள்ளார். கடந்த ஆண்டே தயாராகிவிட்ட இந்த படம் தற்போது ஓடிடியில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் இந்த படம் வெற்றி பெறுவதற்கு அனைவரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து நடிகர் சத்யராஜ் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தமிழீல விடுதலைப்புலிகளின் வரலாற்றை திரித்துக் கூறும் வகையில் தற்போது சில மலைத்தொடர்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேதகு திரைப்படம் கட்டாயம் இருக்கும் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். தீ ஃபேமிலி மேன் 2 வெப்சீரியஸ்க்கு தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.