மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அபிலாஷ் என்பவர் படித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் அண்ணா நகரில் இருக்கும் சித்தி வீட்டிற்கு வந்த தனது தாயை பார்ப்பதற்காக அபிலாஷ் அங்கு சென்றுள்ளார்.
அதன்பின் தனது தாயைப் பார்த்து விட்டு மீண்டும் இரவு நேரத்தில் சித்தி மகனான ஹரிஹரன் என்பவருடன் அபிலாஷ் மோட்டார் சைக்கிளில் விடுதிக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் வேலப்பன்சாவடி அருகில் இருக்கும் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அங்கிருந்த தடுப்பு சுவரின் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட ஹரிஹரனும், அபிலாஷும் சுமார் 15 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
அதன் பின் அருகில் உள்ள அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அபிலாஷ் பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் ஹரிஹரனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.