Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மேம்பால பணி…. “பள்ளம் தோண்டும் போது திடீரென்று உடைந்த குடிநீர் குழாய்”….நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை….!!!!

மேம்பாலம் பணி நடைபெற்று வருகின்ற நிலையில், பள்ளம் தோண்டும் போது எதிர்பாராதவிதமாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்திலிருந்து ஆலம்பாளையம் ஆசிரியர் காலனி சாலை வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 4 மணி அளவில் டி.வி.எஸ் மேடு தனியார் ஆஸ்பத்திரி அருகே பொக்லைன் எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென்று பள்ளிபாளையம் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாய் ஒன்று உடைந்துள்ளது.

இதனால் தண்ணீர் வெளியேறி சுமார் 15 அடி ஆழமுள்ள பள்ளம் முழுவதுமாக நிரம்பி ரோட்டில் ஓடியது. இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனே நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் பேரில் அங்கு சென்ற நகராட்சி ஊழியர்கள் குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுத்தார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |