Categories
மாநில செய்திகள்

மேயர் என்பது பதவி அல்ல…. பொறுப்பு…. உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்…. முதல்வர் மு க ஸ்டாலின்….!!!

சென்னையில் இன்று கலைவாணர் அரங்கத்தில் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் முக ஸ்டாலின் “மக்களாட்சித் தத்துவத்தில் மகத்தான வளர்ச்சியை எட்டுவதற்கு பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். எந்தவித முறைகேடும் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பெரும்பாலான மேயர் நகர்மன்ற தலைவர்கள் இளம் வயதினராக உள்ளனர். தமிழகத்தில் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் நான் தான்.

அப்போது உனக்கு மக்கள் கொடுத்தது மேயர் பதவி இல்லை,  மேயர் பொறுப்பு என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்னிடம் கூறினார். அவர் கூறியது போல பொறுப்புடன் செயல்பட வேண்டும். பதவியை பதவியாக நினைக்காமல் பொறுப்பாக கருதி செயல்பட வேண்டும். மக்கள் சேவையில் மாநகராட்சி, நமது சேவையில் நகராட்சி என்பதே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். இதை செயல்படுத்தி காட்ட வேண்டும். மக்கள் குறைகளை உடனடியாக கேட்டு சரி செய்ய வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுக்க வேண்டும். அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |