தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுகவின் கோட்டை என கருதப்படும் கொங்கு மண்டலத்திலும் கூட திமுக வெற்றி பெற்றது மாபெரும் சரித்திர சாதனையாக கருதப்படுகிறது. அதோடு எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் திமுகவின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. திமுகவின் இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து மேயர் துணை மேயர் பதவிகளுக்கான ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மேயர் துணை மேயர் மண்டல குழு உறுப்பினர் பதவிகள் இளைஞரணி நிர்வாகிகளுக்கு அதிகம் கிடைக்க முதலமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். விரும்பாக்கம் தொகுதி 136 வது வார்டில் வெற்றிபெற்ற நிலவரசி(22) வாய்தவறி முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்று கூறிய வீடியோ வைரலான நிலையில் உதயநிதி ஸ்டாலினின் இந்த அறிவிப்பு இளைஞரணி நிர்வாகிகள் உற்சாகப்படுத்தி உள்ளது.