தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 04/03/2022 நாளை நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மேயர், துணை மேயர் பதவிகளுக்காக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
சென்னை மாநகராட்சி:
மேயர்- திருமதி. ஆர்.பிரியா M.COM.,
துணை மேயர் – திரு. மு.மகேஷ் குமார் B.A
திருநெல்வேலி மாநகராட்சி:
மேயர்- திரு. பி.எம்.சரவணன் B.A.,
துணை மேயர்- திரு. கே.ஆர்.ராஜு B.A .,D.LIT.,
கோவை மாநகராட்சி:
மேயர்- திருமதி. கல்பனா
துணை மேயர்- திரு.இரா. வெற்றிச்செல்வன்
ஈரோடு மாநகராட்சி:
மேயர் – திருமதி. நாகரத்தினம்
துணை மேயர்- திரு. செல்வராஜ்
தூத்துக்குடி மாநகராட்சி:
மேயர்- திரு. என்.பி.ஜெகன், M.COM.,
துணை மேயர்- திருமதி. ஜெனிட்டா செல்வராஜ்
வேலூர் மாநகராட்சி:
மேயர்- திருமதி. சுஜாதா அனந்தகுமார்
துணை மேயர்- திரு. சுனில்
கரூர் மாநகராட்சி:
மேயர்- திருமதி. கவிதா கணேசன் M.SC., B,Ed.,
துணை மேயர்- திரு.தாரணி பி.சரவணன் B.SC.,
திண்டுக்கல் மாநகராட்சி:
மேயர்- திருமதி. இளமதி B.B.A.,
துணை மேயர்- திரு. இராஜப்பா
சிவகாசி மாநகராட்சி:
மேயர்- திருமதி. சங்கீதா இன்பம் B.A.,
துணை மேயர்- திருமதி. விக்னேஷ் பிரியா M.SC .,
நாகர்கோவில் மாநகராட்சி:
மேயர்- திரு. மகேஷ் B.A., B.L.,
துணை மேயர்- திருமதி. மேரி பிரின்சி M.A .,
ஓசூர் மாநகராட்சி:
மேயர்- திரு. எஸ்.ஏ. சத்யா
துணை மேயர்- திரு.சி. ஆனந்தைய்யா
தஞ்சாவூர் மாநகராட்சி:
மேயர்- திரு. சண். இராமநாதன் M.B.A.,
துணை மேயர்- திருமதி. அஞ்சுகம் பூபதி M.B.B.S., M.D.,
தாம்பரம் மாநகராட்சி:
மேயர்- திருமதி. வசந்தகுமாரி கமலகண்ணன் B.Tech(chemical Engineering)
துணை மேயர்- திரு.ஜி.காமராஜ்
திருச்சி மாநகராட்சி:
மேயர்- திரு.மு. அன்பழகன் M.A.,
துணை மேயர்- திருமதி. திவ்யா தனக்கோடி B.COM