Categories
மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்காக சென்ற ஆடுகள்…. ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்…. தீயணைப்பு அதிரடி நடவடிக்கை….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி நெல்லை,தென்காசி, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் அணைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. அதன்படி வைகை அணை நிரம்பியதால் 7,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு கடைமடை பகுதியான இராமநாதபுரத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள புல்லங்குடி பகுதியில்  100க்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ச்சலுக்காக சென்றபோது வைகை ஆற்றின் வெள்ளத்தில் சிக்கியது. உடனே ஆடு மேய்ப்பவர்கள்  தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் சென்று வெள்ளத்தில் சிக்கிய ஆடுகளை மீட்டனர். மேலும் தங்கள் உயிரை பணயம் வைத்து ஆடுகளை மீட்ட தீயணைப்பு துறையினருக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Categories

Tech |