மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வானூர் அருகே இருக்கும் எடச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர்கள் மணிகண்டன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி. விவசாயிகளான இவர்கள் பசுமாடுகளை வளர்த்து வருகின்றார்கள். அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக மாடுகள் சென்றுள்ளது.
நேற்று முன்தினம் கனமழை பெய்தபோது மின்கம்பி அறுந்து கிடந்தநிலையில் மாடுகள் மீது மின்சாரம் தாக்கி உள்ளது. இதனால் மணிகண்டனின் ஒரு பசுமாடும் கிருஷ்ணமூர்த்தியின் மூன்று பசுமாடுகளும் அந்த இடத்திலேயே இறந்து போனது. இதுகுறித்து வானூர் தாசில்தார் பிரபு வெங்கடேஸ்வரருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்து பார்வையிட்டார். மேலும் கால்நடை மருத்துவரும் இறந்துபோன மாடுகளை பிரேத பரிசோதனை செய்தார்.