வளர்ப்பு யானை தாக்கியதால் பாகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள டாப்சிலிப் கோழிகமுத்தியில் வனத்துறைக்கு சொந்தமான வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முகாமில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட அசோகன் என்ற யானை பங்கேற்றுள்ளது. இதனையடுத்து பாகன் ஆறுமுகம் யானைக்கு உணவளித்து மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது திடீரென அந்த யானை ஆறுமுகத்தை பலமாக தாக்கியுள்ளது. இதனால் படுகாயமடைந்த ஆறுமுகத்தை வனத்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ஆறுமுகத்தை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து உயிரிழந்த ஆறுமுகத்தின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.