Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு அழைத்து சென்று ஆடுகள்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

லாரி மோதி 6 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை  சேர்ந்து சிலருடன் சேர்ந்து  ஆடுகளை மேய்ச்சி  வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று  மாணிக்கம் பெரியகோட்டை  சாலையில்  ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து  சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரி மாணிக்கத்தின் ஆடுகள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 6 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. மேலும் 4 ஆடுகள் காயம் அடைந்துள்ளது. இதனைபார்த்த  லாரி ஓட்டுனர் அங்கேயே லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மாணிக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |