வெறி நாய்களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சரஸ்வதிவிளாகம் கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கம் போல் ஆடுகளை கொள்ளிடம் ஆற்றங்கரையில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். அப்போது அங்குள்ள நாய்கள் 6 ஆடுகளை விரட்டி கடித்து குதறியுள்ளது.
இதனால் ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதனையடுத்து ஆடுகளை கடித்து குதறும் வெறி நாய்களை கட்டுப்படுத்த விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.