விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டாதாரன் கொட்டாய் மலை கிராமத்தில் விவசாயியான சின்னவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆடுகள் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்ததால் சின்னவன் தழை வெட்டுவதற்காக அங்கிருந்த வேப்ப மரத்தில் ஏறியுள்ளார்.
இந்நிலையில் தழைகளை வெட்டிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சின்னவன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.