நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுஹட்டி கிராமத்தை சுற்றி இருக்கும் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நடுஹட்டியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் காட்டெருமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது நிலைதடுமாறி அந்த காட்டெருமை தேயிலை தோட்டத்திற்கு பின்புறம் இருக்கும் வீட்டிற்கும், தடுப்பு சுவருக்கும் இடையே தவறி விழுந்து வெளியே செல்ல வழி இல்லாமல் சிக்கி கொண்டிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவல் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டெருமை நடந்து செல்வதற்கு வசதியாக தடுப்பு சுவரை உடைத்து வழி ஏற்படுத்தியுள்ளனர். பின்னர் அந்த வழியாக காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்றது.