காட்டெருமைகள் முட்டியதால் குதிரை பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னப்பள்ளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 3 குதிரைகள் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தோட்டத்திற்குள் புகுந்த காட்டெருமைகள் 2 குதிரைகளை பலமாக முட்டியது. இதனால் படுகாயமடைந்த ஒரு குதிரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த குதிரையின் உடலை பரிசோதனை செய்து அங்கேயே புதைத்து விட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இறந்த குதிரைக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றும், இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.