மின்னல் தாக்கி பசு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலாத்துக்குழி கிராமத்தில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கல்வராயன் மலைப் பகுதியில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. ஆனால் மாலை 4 மணிக்கு அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த இளையராஜாவுக்கு சொந்தமான பசு மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.